கமல் கட்சியை ஆரம்ப நிலையிலேயே அழிப்போம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் பயணிக்க தொடங்கிவிட்டார். இம்மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெண்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கமல் கட்சி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ”அதிமுகவை அழிக்க நினைக்கும் எந்த கட்சியையும் நாங்கள் விட்டுவைப்பதில்லை. அந்த வகையில் கமல் கட்சியை ஆரம்ப நிலையிலேயே அழிப்போம். அவரது கொள்கைகள் தமிழக மக்களுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத கொள்கைகள் என்பதால் அவரது கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

ஏற்கனவே கமல்ஹாசன் குறித்தும் அவரது கட்சி குறித்தும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிகம் விமர்சனம் செய்துள்ள நிலையில் தற்போது அந்த கட்சியையே அழிப்போம் என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *