தைரியம் இருந்தால் அரசியலுக்கு வாருங்கள்: கமலுக்கு அமைச்சர் ஜெயகுமார் சவால்

கடந்த சில மாதங்களாக தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வரும் கமல்ஹாசனுக்கு தமிழக அமைச்சர்கள் மிரட்டல் விடுத்தும், பதிலடி கொடுத்தும் வரும் நிலையில் இன்று நிதியமைச்சர் ஜெயகுமார் கமல்ஹாசனுக்கு ஓப்பனாக சவால் விடுத்துள்ளார்.

தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும். தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும்” என்று கூறினார்.

மேலும் திமுகவுக்கு தற்போது நடிகர் கமலின் தயவு தேவைப்படுகிறது. திமுகவை தாங்கி பிடிக்கும் முட்டுக்கட்டையாக கமல் தேவைப்படுகிறார். திமுகவின் நிலைமை இந்த அளவுக்கு ஆகிவிட்டது எனக்கு வருத்தமாக இருக்கின்றது. இன்று ஸ்டாலினுக்கு கமலின் உதவி தேவைப்படுவதால் அவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்’

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *