shadow

நான் முந்திரிக்கொட்டையா? ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி

நேற்று மகளிர் தின விழா ஒன்றில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘காவிரி விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் இல்லை என்றும், தைரியம் இருந்திருந்தால் தமிழகத்திற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு முந்திரிக்கொட்டை என்றும் யோசிக்காமல் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவதாகவும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ஜெயகுமார் சற்றுமுன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் இல்லை. எதிர்கருத்து தெரிவித்தால் உடனே முந்திரிக்கொட்டை என்பதா? நான் எந்த விஷயத்தையும் முந்திரிக்கொட்டை போன்று சொல்வது கிடையாது.” என்றார்.

மேலும், “முதல்வருடன் உள்ளே ஒன்று பேசிவிட்டு, வெளியில் ஸ்டாலின் வேறொன்று பேசுவது அரசியல் நாகரிகமல்ல. காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தியுங்கள் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது. இன்னும் 2 வாரங்கள்தான் முடிந்துள்ளன. அதற்குள் அவசரப்பட்ட எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்றும் அவர் கூறினார்

Leave a Reply