shadow

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமை ரத்தா?. மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
girirajsingh
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்தே சிறுபான்மையர்களுக்கு எதிராக கருத்துக்கள் அதிகளவில் ஆட்சியாளர்களிடம் இருந்தே வெளிப்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பாஜக மத்திய அமைச்சர்களே அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் கிரிராஜ் என்பவர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் இஸ்லாமியர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் இந்து பெண்கள் பாகிஸ்தானியர்களைப் போல பர்தா அணிந்துக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply