shadow

அமெரிக்காவுக்கு போட்டியாக ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் சீனா

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் சீனா, ராணுவ விஷயத்திலும் அமெரிக்காவுக்கு நிகராக ஒவ்வொரு ஆண்டும் அதிக நிதியை ஒதுக்கி வருகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே சீனா ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மேலும் 7 சதவீதம் கூடுதலாக ஒதுக்கியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு 10 சதவீதம் கூடுதல் நிதி என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் விரிந்து வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும், கிழக்கு ஆசிய நாடுகளில் ராணுவ பலத்தில் முதல் இடத்திலும் உள்ள சீனா, தன்னை உலக அளவில் முன்னிறுத்தி கொள்ளவும், உலக வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கவும், சீனா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சீன ராணுவத்தில் தற்போது 2.3 மில்லியன் ராணுவ வீரர்கள் உள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய ராணுவ வீரர்களை கொண்ட நாடு சீனாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply