மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மர் ஓய்வு பெறுவதை அடுத்து அந்த பதவிக்கு இந்தியர் ஒருவர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை சேர்ந்த சத்யா நதெள்ளா என்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டவர்களின் பெயர்களில் இவருடைய பெயர் முதலில் இருப்பதாக வால் ஸ்டீர்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சத்யா நதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பதவியில் இதற்கு முன் பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். சத்யா நதெள்ளா தேர்ந்தெடுக்கப்பட்டால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும்.

Leave a Reply