ராப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை மரணம்

உலகப்புகழ் பெற்ற பாப் இசை பாடகர் என்று இசை ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் மைக்கல் ஜாக்சன். இவர் அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் என பரிணாமங்களை கொண்டவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜீன் 25-ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் இவருடைய தந்தை ஜோசப் ஜாக்சன் நேற்று அமெரிக்காவில் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 89

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் தனிமையில் வசித்து வந்த இவர் ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கெல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் கடந்த பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் நேற்று மாலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவலை ஜாக்சன் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிசெய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *