shadow

விராத் கோஹ்லியை வெறுப்பேற்ற வேண்டாம். ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் அறிவுரை

இந்தியா வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி அனைத்து தொடர்களையும் இழந்து நாடு திரும்பிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

இந்நிலையில் புதிதாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் விராத் கோஹ்லியை வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என ஆஸ்திரேலியா வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி அறிவுரை கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை சீண்டினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும், என்றும் அதனால் அவரை சீண்டாமல் ஆட்டக்களத்தில் இருந்து அவரை எப்படி வெளியேற்றுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஹசி தெரிவித்துள்ளார்.  

கடைசி வரை போராடும் குணம் கொண்ட விராத் கோஹ்லியை விரைவாக பெவிலியனுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply