shadow

Prabhu_22314_m

 

கோச்சடையான் படத்தில், மரணம் அடைந்த நடிகர் நாகேஷ் மோஷன் கேப்ட்சர் டெக்னாலஜி மூலம் நடிக்கும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், பிரபு நடிக்கும் ஒரு படத்தில், எம்.ஜி.ஆர் நடிக்கும் சில காட்சிகள் இணைக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’ திரைப்படத்தில் கெளதம் கார்த்திக்கின் தந்தையாக நடிகர் பிரபு நடிக்கிறார். இந்த படத்தில் பிரவுக்கும் வின்செண்ட் அசோகனுக்கு குத்துச்சண்டை போட்டி நடப்பதாக ஒரு பிளாஷ்பேக் காட்சி இருக்கின்றது.

இந்த போட்டியை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் நேரில் பார்க்க வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு தென்சென்னையில் நடந்த பல குத்துச்சண்டை போட்டிகளை நேரில் பார்க்க வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை இந்த படத்தில் பயன்படுத்த இருப்பதாக இயக்குனர் ராஜபாண்டி தெரிவித்துள்ளார்.

மீண்டும் எம்.ஜி.ஆரை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

Leave a Reply