எம்.ஜி.ஆர் பாணியில் கலக்க காத்திருக்கும் ஷாருக்கான்
mgr
எம்.ஜி.ஆரின் அரசியல் கொள்கைகளை இன்றைய பல தலைவர்கள் பின்பற்றி வருவதாக கூறிக்கொண்டிருக்கும் நிலையில் எம்.ஜி.ஆரின் சினிமா பாணியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தன்னுடைய அடுத்த படத்தில் பின்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த தேர்த்திருவிழா என்ற படத்தில் ஒரு நாடக காட்சியில் இருவரும் நடித்திருப்பார்கள். இந்த நாடகத்தை உண்மையான எம்.ஜி.ஆர் தனது வழக்கமான தொப்பியுடன் வந்து நாடகத்தை பார்ப்பது போன்றும் நாடகம் முடிந்தபின்னர் நாடகத்தில் நடித்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பாராட்டுவது போன்ற காட்சி இருக்கும்.

இதேபோல் ‘எங்கள் தங்கம்’ என்ற படத்தில் நடிகர் எம்.ஜி.ஆரை உண்மையான எம்.ஜி.ஆர் பாராட்டுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதே பாணியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ‘ஃபேன்’ என்ற படத்தில் நடிகராகவும்,  அந்த நடிகரின் ரசிகராகவும் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். கிளைமாக்ஸில் ரசிகன் ஷாருக்கானுக்கு நடிகர் ஷாருக்கான் பாராட்டு தெரிவிப்பது போன்ற காட்சி ஒன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம். எம்.ஜி.ஆருக்கு அடுத்த அதே பாணியில் நடித்துள்ள ஷாருக்கானின் இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *