shadow

இனவிருத்திக்காக மட்டுமா திருமணம்?. ஓரினச்சேர்க்கை வழக்கில் மெக்சிகோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

marriageதிருமணம் என்பது இனவிருத்திக்காக மட்டும் இல்லை. இரண்டு மனங்கள் ஒன்றுசேர வேண்டும் அதுவே திருமணம் என்று கூறி ஓரினச்சேர்க்கை திருமணத்தை மெக்சிகோ நாட்டு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டபூர்வமாகிவிட்டதாக அந்நாட்டு மக்களும் வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.

ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து மெக்சிகோ நாட்டு பாராளுமன்றம் எவ்வித ஒப்புதலும் இன்னும் தரவில்லை. இந்நிலையில் இத்திருமணத்திற்கு தடை விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று ஒரு வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் அந்நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீர்ப்பில் “இனவிருத்திக்காகவே ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதாக சட்டம் சொல்கிறது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமணம் என்பது இரு நபர்களின் மனங்கள் ஒன்று சேர்வதில்தான் உள்ளது என அதிரடியாக கூறியுள்ளது

Leave a Reply