shadow

metro railசென்னையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் தொடங்கவிருக்கும் மெட்ரோ ரயிலில் குறைந்த கட்டணமாக ரூ.8-ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடக்க தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ”சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் முற்றிலும் முடிவடைந்து  சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறாது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அடுத்த மாதம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார். அவருடைய சான்றிதழ் பெற்ற பின்னர் வருகின்ற பொங்கல் தினம் முதல் முறையாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த வழித்தடத்திற்கான பயணக் கட்டணம் தற்போது தற்காலிக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. முறையாக அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன்பின் முறையான அறிவிப்பு வெளியிடப்படும்.

மாதிரிக்கட்டண விபரம்:

முதல் 2 கிமீக்கு                   ரூ.8
2 முதல் 4 கி.மீ வரை           ரூ.10
4 முதல் 6 கி.மீ. வரை         ரூ.11
6 முதல் 9 கி.மீ. வரை         ரூ.14
9 முதல் 12 கி.மீ. வரை        ரூ.15
12 முதல் 15 கி.மீ. வரை     ரூ.17
15 முதல் 18 கி.மீ. வரை     ரூ.18
18 முதல் 21 கி.மீ. வரை     ரூ.19
21 முதல் 24 கி.மீ. வரை     ரூ.20
27 கி.மீ. வரை                       ரூ.23

இந்த கட்டண விவரம் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Leave a Reply