shadow

b8d6714e-7b6d-41d5-9b6c-7f62a6177f59_S_secvpf

உடலிலுள்ள அசுத்த நீரும், டாக்சின்களும் வியர்வையாக வெளிப்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

அதிக வியர்வையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

• வினிகர் இரண்டு டீஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பழ கலவையை கலந்து, உணவுக்கு முன் மூன்று வேளைகளிலும் உட்கொண்டு வந்தால், வியர்வை பிரச்சனையை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

• நாள்தோறும் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறு, அருந்தி வந்தாலும் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.

• பச்சையான உருளைக்கிழங்கு துண்டுகளை சாப்பிடுவதும் ஒரு தீர்வு. சில துண்டுகளை வியர்வை அதிகம் ஏற்படும், கை மற்றும் முகத்தில் பூசுவதாலும், வியர்வை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

• சிறிதளவு சூடத்தை, தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகரிக்கும் இடங்களில் தடவலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து, அந்த கலவையை பயன்படுத்தி கைகளை நன்றாக மசாஜ் செய்து வந்தால், உள்ளங்கைகளில் ஏற்படும் வியர்வையை கட்டுபடுத்தலாம்.

• நாள்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தாலும், அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தலாம்.

• நாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் தூய்மையடைவதுடன், புத்துணர்ச்சி பெறுகிறது

Leave a Reply