நடமாடும் காந்த சிறுவன். போஸ்னியா நாட்டில் ஒரு அதிசயம்

1போஸ்னியா என்ற நாட்டில் உள்ள 5 வயது சிறுவனின் உடலில் எந்த பொருள் வைத்தாலும் ஒட்டிக்கொள்வதால் அவன் ஒரு நடமாடும் சிறுவனாக வாழ்ந்து வருகிறான். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது

எம்ரான் டெலிக் என்ற 5 வயது சிறுவனின் பெற்றோர்கள் தற்செயலாக தங்கள் மகன் மீது எந்த பொருள் வைத்தாலும் ஒட்டி கொள்வதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த சிறுவனை சோதனை செய்த மருத்துவர்கள் வித்தியாசமாக எதுவும் சிறுவனின் உடலில் தெரியவில்லை என்றும் இதனால் சிறுவனின் உடல்நிலைக்கு பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்த பெற்றோர்கள் தங்கள் மகனின் பிரச்சனைக்கு யாராவது தீர்வு சொல்வார்களா? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=_qKI7P6QJYc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *