மெர்சல் படத்திற்கு பிரிட்டன் நாட்டின் முக்கிய விருது

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனால் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நல்ல விளம்பரமாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆகியது.

இந்த நிலையில் இந்த படம் பிரிட்டனில் நடைபெற்று வரும் 46 வது தேசியத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது. இந்த விழாவில் ‘மெர்சல் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த விருது முழுக்க முழுக்க ரசிகர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் விருது என்பதும், இந்த விருது கிடைத்ததால் மெர்சல் படக்குழுவினர்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *