ரிலீசுக்கு முன்பே இணையதளங்களில் வெளியான ‘மெர்க்குரி’: கார்த்திக் சுப்புராஜ் அதிர்ச்சி

கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் ஒரு திரைப்படம் வெளியானால், அன்றைய தினமே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றது. இதனை தடுக்க பல்வேறு செய்யப்பட்டபோதும் முடியவில்லை

இந்த நிலையில் தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் செய்யாமல் மற்ற மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி. இந்த படம் தமிழகத்தில் திரையிடுவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானது கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலைநிறுத்தம் முடிந்த பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தால் ஓரளவு வசூலாகியிருக்கும். ஆனால் முன்கூட்டியே ரிலீஸ் ஆனதால் இனி தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும் எதிர்பார்க்கும் வசூல் கிடைக்குமா? என்பது சந்தேகமே. மேலும் இந்த படம் நெகட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *