அனைத்து வன்முறைகளுக்கு ஆண்கள்தான் காரணமா? மேனகாவின் கருத்துக்கு எதிர்ப்பு
menaka gandhi
மத்திய அமைச்சர் மேனகா காந்தி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் ஆண்களே காரணமாக இருக்கின்றனர் என்றும் இதனை தடுக்க பாலின சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரபல சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த மேனகா காந்தி, ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “நாட்டில் நடக்கும் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் ஆண்களே காரணமாக இருக்கின்றனர். இதனை தடுக்க பாலின சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக கல்வி அமைப்பில் பாலினம் குறித்த புரிதல்களை உருவாக்கும் வகையில் அதிகமான பாடங்களை இடம் பெறச் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல், பெண்களை மதிக்கும் ஆண்களை கண்டறிந்து அவர்களை கவுரவிக்க வேண்டும்” என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ளார். அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம் என்று கூறியுள்ள மேனகா காந்திக்கு இணையவாசிகள், ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்களும் பலவகையான குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும், பெருவாரியான ஆண்கள் குற்றவாளி ஆவதற்கு பெண்களே காரணமாக இருப்பதாகவும் டுவிட்டரில் கருத்துக்கள் குவிந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *