குப்பை மேடாக மாறிய ஆஸ்திரேலிய கடற்கரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் வந்த பிரச்சனை

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போன்ர் நகரில் உள்ள செயிண்ட் கில்டா கடற்கரை குப்பை மேடாக மாறியுள்ளது.

இந்த பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டத்தின்போது மது அருந்தியும், குளிர்பானங்கள் அருந்தியும், அந்த பாட்டில்களை ஆங்காங்கே போட்டதால் கொண்டாட்டம் முடிந்த பின்னர் அந்த பகுதியே குப்பைமேடாக மாறியுள்ளது.

இந்த நிலையில் குடித்துவிட்டு பொதுமக்களை போதையில் தொந்தரவு செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *