இளவரசர் ஹாரி திருமணத்தை நிறுத்துங்கள்: மணமகள் சகோதரர் கடிதம்

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன்னுடைய நீண்ட நாள் காதலியும் நடிகையுமான மேகன் மார்க்லேவை வரும் 19ஆம் தேதி திருமணம் செய்யவுள்ள நிலையில் இந்த திருமணத்தை நிறுத்துமாறு மணமகள் மார்க்லேயின் சகோதரர் தாமஸ் என்பவர் இளவரசர் ஹாரிக்கு கடிதம் எழுதி உள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் தாமஸ் கூறியிருப்பதாவது: நடக்கவிருக்கும் உங்களது திருமணத்தை நிறுத்திவிடுங்கள். மார்க்கலே வாழ்க்கையில் ஆழமில்லாத பெண் ஆவாள். மேலும் அதிகமாக கற்பனையில் வாழ்பவள். அவளைப்பற்றி உலகமே அறிந்து கொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் மெர்க்கலின் சுயரூபதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். அவள் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். இந்த திருமணம், இங்கிலாந்து ராயல் திருமண வரலாற்றில் மிகப்பெரிய தவறு ஆகும் என எழுதியுள்ளார்.

இந்த கடிதம் இங்கிலாந்து மன்னர் குடும்பத்தினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி இந்த திருமணம் நடைபெறும் என்று மன்னர் குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *