ரஜினிக்கு ஜோடியாக 4வது முறை இணையும் பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த படத்தில் நடிகர் சூரி, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் இந்தப் படம் உருவாக உள்ளதையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது

எஜமான், வீரா, முத்து ஆகிய மூன்று திரைப்படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள மீனா நான்காவது முறையாக அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply