shadow

meena-actress-childhood-1என் ராசாவின் மனசிலே, முத்து, வீரா, அவ்வை சண்முகி, போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீனா. இவருடைய தந்தை துரைராஜுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் மரணம் அடைந்துவிட்டதாக தெரிகிறது.

நடிகை மீனாவின் தந்தை துரைராஜுக்கு வயது 67. இவருக்கு ராஜ் மல்லிகா என்ற மனைவி உள்ளார். நடிகை மீனா இவர்களுக்கு ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்த துரைராஜ் உடல் சைதாப்பேட்டை அருகே உள்ள ஸ்ரீநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிகிறது. திரையுலகை சேர்ந்தவர்கள் நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

meen-parents

Leave a Reply