மோகன்லால் மற்றும் மீனா நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக நடிக்க மீனா, நதியா, சிம்ரன் ஆகியோர்களில் ஒருவர் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது த்ரிஷ்யம் படம் தெலுங்கிலும் ரீமேக் ஆக இருக்கின்றது. மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மீனா நடித்த வேடத்தில் மீண்டும் மீனாவும், இன்னொரு முக்கிய வேடத்தில் நதியாவும் நடிக்கின்றனர்.

பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான். மகளை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்தவனை அவருடைய தாய் அடித்து கொலை செய்துவிடுவார். மகனை கொலை செய்தவரை போலீஸ் அதிகாரி தேடுவதுதான் கதை. போலீஸ் அதிகாரி வேடத்தில் நதியாவும், கொலை செய்யும் தாய் வேடத்தில் மீனாவும் நடிக்க இருக்கின்றனர்.

தெலுங்கில் இந்த படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply