shadow

download

பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் நாயுருவியைப் பற்றி குறிப்பிடுகையில் அது உள்ளுக்குச் சாப்பிட்டால் நல்ல ஒரு மலமிளக்கியாகச் செயல்படுமென்றும், ஊடுறுவும் தன்மை நிறைந்ததும், பசியை அதிகரிக்கச் செய்யக்கூடிய திறனும் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். கசப்பும், காரமும் கொண்ட நாயுருவி தன்னைச் சுற்றியுள்ள செரிக்காத உணவைச் செரிக்கச் செய்துவிடும் என்றும், வாந்தியை நிறுத்துவதும், கபம் மற்றும் உடலில் உள்ள ஊளைச் சதை, வாயு உபாதை ஆகியவற்றைக் குணப்படுத்தக் கூடியது என்றும் எடுத்துரைக்கிறார்.

இதய உபாதைகள், வயிற்று உப்புசம், மூலம், உடல் அரிப்பு, வயிற்றில் ஏற்படும் குத்துவலி, வயிற்றில் ஏற்படும் நீரின் சேர்க்கை மற்றும் நிணநீர் க்ரந்தி வீக்கம் ஆகிய உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடிய ஓர் அற்புதமான மூலிகை மருந்தாகும் என்றும் விவரிக்கிறார்.

ஷோடல நிகண்டு எனும் புத்தகத்தில் நாயுருவி தலையில் ஏற்படும் பூச்சித் தொல்லைகளாகிய பேன் மற்றும் ஈறு போன்றவற்றை அழிக்கக் கூடியது என்றும் கூடுதலாக ஒரு விஷயத்தைச் சேர்க்கிறார். கசியும் இரத்தத்தை நிறுத்தக் கூடிய அதன் தன்மையானது நாயுருவியின் மருத்துவகுணத்தை மிக உயர்ந்த அளவிற்கு உயர்த்துகிறது.

Leave a Reply