shadow

entranceதமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் முதுநிலை நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்தப் படிப்புகளில் அகில இந்திய இடங்களுக்கான தேர்வுகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படிப்புகளில் தமிழகத்தின் சார்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org

Leave a Reply