shadow

கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ: கூட்டணிக்கு அச்சாரமா?

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் எந்த நேரமும் ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களாக உடல்நலமின்றி இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வைகோ செல்வதாக கூறப்பட்டாலும், கடந்த சில மாதங்களாகவே அவர் திமுக கூட்டணியை நெருங்கி வருவதாகவும், இந்த சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply