shadow

images (2)

புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி பொறியியல் பல்கலைக்கழகத்தில் 2015-ம் கல்வியாண்டில் எம்சிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலையில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்/கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வணிக கணிதம், கணிதம், புள்ளியியல், கணினி பயன்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து 50 மற்றும் 40 சதவீத மதிப்பெண்களை எடுத்து  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.1030. எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.530 வசூலிக்கப்படுகிறது.

CENTAC-CET 2015 அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3ம் தேதிக்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பலாம். CENTAC-CET 2015 MCA ஜூலை 19-ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply