shadow

15

இந்த வருடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 875,000 மாணவர்கள் +2 தேர்வு எழுதியுள்ளனர். இவர்களின் ரிசல்ட் வரும் மே மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் பொறியியல் மற்றும் மருத்துவ பட்டப்படிப்பிற்கான சேர்க்கையை முடித்துவிட அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் மே மாதம் முதல் வாரம் முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் மொத்தம் உள்ள 9 மருத்துவக்கல்லூரிகளில் 2555 இடங்கள் உள்ளன. இதில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் 2,172 மட்டுமே. மீதி 383 இடங்கள் இந்தியாவின் அனைத்து பகுதியின் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே ஒரு பல் மருத்துவக்கல்லூரி சென்னையில் செயல்படுகிறது. இதில் 100 இடங்கள் வரை உள்ளது.

Leave a Reply