shadow

IIT-Delhi1

தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் முழுநேர எம்பிஏ படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலையில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டட கலை, பார்மசி, பி.எஸ்சி.,அக்ரிகல்சர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

முதுகலையில் கணிதம், வேதியியல், இயற்பியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு தேர்வெழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பவர்கள் CAT 2014 தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு மற்றும் குழுகலந்துரையாடல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு dms.iitd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply