shadow

மே 28-ல் கமல் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா
meen kuzhambum
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஒரு படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தயாரித்து வரும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், இந்த விழாவில் க்மல கலந்து கொள்ள ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

காளிதாஸ் ஜெயராம், ஆஸ்னா ஜாவேரி, பிரபு, பூஜா குமார், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அமுதேஷ்வர் என்பவர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பாளராக கெவின் அவர்களும் பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply