மத்திய பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளுநர் உத்தரவு

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான 22 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து முதல் அமைச்சர் கமல்நாத் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இருந்து 22 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் அவர் பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அவர் பெரும்பான்மையை நிரூபிப்பாரா? ஆட்சி கவிழுமா? அல்லது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வாரா? என்ற கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply