’மாஸ்டர்’ செகண்ட்லுக்கும் காப்பியா? நெட்டிசன்கள் கிண்டல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் செகண்ட்லுக் நேற்று மாலை வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த போஸ்டரும் காப்பி என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையே காப்பி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த போஸ்டரும் காப்பி என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் தர்ம சங்கடத்தின் உள்ளனர்

இருப்பினும் ஒரே மாதிரி பலர் சிந்தித்து என்றும் இதை காப்பி என்று கூற முடியாது என்றும் விஜய் ரசிகர்கள் சமாதானம் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply