சென்னையில் ஜியோ சிம் வாங்க அலைமோதும் இளைஞர்கள். போக்குவரத்து நெரிசல்

3தமிழக வரலாற்றில் தியேட்டர், கிரிக்கெட் ஸ்டேடியம் தவிர சிம்கார்டு வாங்குவதற்காக இளைஞர்கள் வரிசையில் நின்றார்கள் என்றால் அது ஜியோ சிம் வாங்குவதற்காகத்தான். சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் ரிலையன்ஸ் ஷோரூம் முன் இளைஞர்கள் வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து ரிலையன்ஸ் ஜியோ சிம்மை பெற்று செல்கின்றனர்.

சென்னையின் அண்ணாசாலையில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது. பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து ஜியோ சிம்மை வாங்கி செல்கின்றனர். தேவி தியேட்டர் அருகே உள்ள இந்த ஷோரூமில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால் அந்த பகுதியே பரபரப்பாக உள்ளது.

கடந்த 7ம் தேதி, பெங்களூருவில் ஜியோ சிம் கேட்டு ஷோரூம்களில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.அங்குள்ள இந்திராநகர்,எம்.ஜி.ரோடு பகுதிகளில் ‘ஜியோ பீவர்’ அதிகம் பரவியுள்ளதாகத் தெரிகிறது.

அப்படி என்னதான் இருக்குது ஜியோ சிம்மில், இதோ அறிமுக விழா அன்று முகேஷ் அம்பானி சொன்னதை படியுங்கள்: “வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது ரிலையன்ஸ். நீங்கள் ஜியோ பயன்படுத்தினால், வாய்ஸ் காலிங் அல்லது டேட்டா இரண்டில் ஒன்றிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மற்றொன்று இலவசம். இந்தியா முழுக்க, ரோமிங் கட்டணமே கிடையாது. ஜியோவின் டேட்டா கட்டணங்கள் உலகிலேயே மிகவும் மலிவானது. 1 GB டேட்டா, 50 ரூபாய்தான். அதாவது 1 MB டேட்டாவின் விலை 5 பைசாதான். நீங்கள் அதிகம் பயன்படுத்துங்கள். ஆனால் குறைவாக பணம் செலுத்துங்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *