shadow

masala kushkaதேவையானவை:

பச்சரிசி – ஒரு கப், பால் – 2 கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்), பச்சை மிளகாய் – 3, புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய், புதினா, கொத்த மல்லித் தழை ஆகியவற்றை வதக்கி…  மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து… அரைத்து வைத்த வெங்காயம் – தக்காளி விழுது மற்றும் இஞ்சி – பூண்டு விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரிசி, பால் சேர்த்து நன்கு கிளறி, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும், ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.
இதற்கு, ஆனியன் ராய்தா மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சூப்பர் காம்பினேஷன்

Leave a Reply