shadow

பெரியாரின் வாரிசு என்று சொல்ல கருணாநிதிக்கு தகுதி உண்டா? கம்யூனிஸ்ட் கேள்வி
communist
தமிழகத்தில் நடந்து வரும் ஆணவக் கொலைகளை எதிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் மாபெரும் மாநாட்டு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “பெரியாரையும், அண்ணாவையும் சந்திக்காமல் போயிருந்தால் கம்யூனிஸ்ட்டாக வலம் வந்திருப்பேன் என்று சொன்ன கருணாநிதிக்கு இந்த ஆணவக் கொலைகளை எதிர்த்து ஒரு கூட்டம் போட தைரியம் இருக்கா. பெரியாரின் வாரிசு என்று சொல்ல இவருக்கு என்ன அருகைதை இருக்கு. சாதி வெறியர்களிடம் சரணடைந்து கிடக்கிறது அரசு. அரசியல் ஆதாயத்திற்காக பா.ம.க. தலைவர் ராமதாஸ் சாதி வெறி ஊட்டிக்கொண்டிருக்கிறார்” என்றார்.

அடுத்து பேசிய அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “மண மாறுதல் என்று சொல்வதன் மூலம் ஆணவக் கொலைகள் போன்ற பிரச்னைகள் தீராது. தலித்துக்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பொருளாதார ரீதியாக உயரனும். அதற்கு நில சீர்த்திருத்தம் வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தலித்துக்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவையில்லை என்கிறார்கள்.

சாதிய அடிப்படையில் அணி திரட்டுகிறது பா.ஜ.க. சாதிய கொடுமைகளை ஒடுக்குவதற்கு பதிலாக அதை ஊக்குவிப்பதாக இருக்கிறது அரசு. அம்பேத்கர், பெரியார் போன்ற பெரிய பெரிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூப்பிட்டவுடனேயே ஒரு கோடி மக்கள் திரளுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த சாதியக்கொடுமைகள் தலைவிரித்தாடியிருக்கிறது. கவுரவ கொலை, கவுரவ கொலை என்கிறார்கள். இதில் என்ன கவுரவம் இருக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சாதி வெறியர்களின் கொலை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனிதன் என்ற தகுதியை தவிர, எந்த தகுதியையும் ஏறுக்கொள்ளாது.

டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மரணமும் அப்படித்தான். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக நான் பேசுவேன். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்”

இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்

Leave a Reply