shadow

விஷாலின் ‘மருது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
vishal
விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு வழக்கம்போல் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் விஷால் நடித்த இன்னொரு படமான ‘மருது’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கொம்பன்’ முத்தையா இயக்கியுள்ள இந்த படத்தில் விஷால், ஸ்ரீவித்யா, சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை விஷால் தனது டுவிட்டரிலும் பதிவு செய்தூள்ளார். இதே தேதியில்தான் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிட்ட விஷால் – சிம்பு மோதல் மீண்டும் தொடர்வதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply