shadow

6

நேற்று பூமியின் மிக அருகே செவ்வாய் கிரகம் தோற்றமளிக்கும் அற்புத காட்சியை காண சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

சிறப்பு தொலைநோக்கி மூலம் செவ்வாய் கிரகத்தை பார்க்கும் வசதியை நேற்று பிர்லா கோளரங்கம் செய்திருந்தது. நேற்று மாலை 7 மணி முதல் 8மணி வரை பொதுமக்கள் இந்த அரிய காட்சியை கண்டு ரசித்தனர். நேற்று பூமிக்கு மிக அருகில் அதாவது 9.2 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு செவ்வாய் வந்தது. சூரியக்கதிர்கள் செவ்வாய் கிரகம் முழ்வதும் பட்டு மிகவும் பிரகாசமாக தெரியும் அற்புத காட்சியை நேற்று கண்டு ரசித்ததாக பலர் கூறினர்.

மேலும் நேற்று பூமி, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply