shadow

marriage

திருமண பந்தத்தினுள் நுழையும் ஆணும் பெண்ணும் இந்த காலகட்டத்தில்தான் பரஸ்பரம் மிக பக்குவமாகவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போறதுக்கு காரணமே பரஸ்பரம் புரிதல் இல்லாமைதான்.

அதனால தான்  காதல் திருமணமோ… பெரியோர்கள் நிச்சயித்த திருமணமோ… எதுவானாலும் கவுன்சலிங் அவசியம் என்று கூறப்படுகிறது. திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகள் (Premarital counseling), திருமணத்துக்கு பிந்தைய ஆலோசனைகள் (post marital counseling) இரண்டையும் தயங்காமல், தவறாமல் பெற வேண்டியது அவசியம்.

நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்துல பெண்ணும், பையனும் பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனா, அப்போ ரெண்டுபேரும் தங்களோட நெகட்டிவ் குணங்களையும், தங்களோட குறைபாடுகளையும் வெளிப்படையா பேசுறதில்லை.

முழுக்க பாஸிட்டிவான கோணத்துல காட்டுறதுலயே குறியா இருப்பாங்க. தன்னை ஒரு ஹீரோ, ஹீரோயின் ரேஞ்சுக்கும், தியாகியாகவும், பரந்த மனப்பான்மையும் உதவும் குணமும் உடைய ஆளாகவும் காட்டிப்பாங்க. கிளர்ச்சியிலயும் கிறக்கத்துலயும் இருக்கிற துணையும், அதை நம்புவாங்க.

திருமணத்துக்குப் பின் பல முறை தாம்பத்ய உறவுகள் நடந்த பிறகும், இயல்பான வாழ்க்கை சூழலாலேயும் மெள்ள மெள்ள அவங்கவங்களோட உண்மையான குணத்தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பாங்க. கணவனோட முன்கோபம் புது மனைவியை நிலைகுலைய வைக்கும், அடிக்கடி சந்தேகப்படுற மனைவியின் குணம் புது கணவனை கதிகலங்க வைக்கும்.

இப்படி ஆரம்பிக்கிற விரிசல்… திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய பள்ளத்தாக்கையே உருவாக்கிடும். அப்போ தடுமாறிடாம வாழ்க்கையை தக்கவெச்சுக்க, திருமணத்துக்கு முந்தைய கவுன்சலிங் அவசியம்.  ரொம்ப மாடர்னாக வாழ்க்கை முறை மாறிவிட்ட இந்த சூழல்லேயும் கட்டுப் பெட்டியா வளர்க்கப்படுற பொண்ணுங்களும் இருக்காங்க, பசங்களும் இருக்காங்க.

செக்ஸ் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் திருமண பந்தத்துக்குள்ளே போகிற இந்த மாதிரியான நபர்கள், தன்னையும் வருத்திக்கறதோட, துணையையும் வதைப்பாங்க. செக்ஸ் விஷயத்துல ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்குது. ஆணுக்கு சட்டென்று செக்ஸ் நாட்டம் வரும். ஆனா, பெண்கள் நிதானமா முன்னேறுவாங்க…

அதேமாதிரி நீடித்தும் இருக்கும் அவங்க உணர்ச்சி. இந்த அடிப்படை அறிவையெல்லாம் திருமண பந்தத்துக்குள்ள நுழையும் ஆணும், பெண்ணும் புரிஞ்சுக்கணும். ”திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும் சரி… சம்பந்தப்பட்ட தம்பதியால தங்களுக்குள்ள பேசி பிரச்சனையை தீர்க்க முடியலைங்கிற கட்டத்துல, தாமதிக்காம ஒரு குடும்பநல ஆலோசகரை அணுகுங்க.

Leave a Reply