shadow

மெரினாவில் போர்க்களம். மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதால் பதட்டம்

கடந்த 7 நாட்களாக சென்னை மெரீனாவில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு இன்று தொடங்கும் சட்டசபையிலும் சட்டமாக இருப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

இதனையடுத்து போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், காவல்துறையினர்களும் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் மாணவர்கள் மெரீனாவை விட்டு வெளியேற மறுத்து வருவதால் வேறு வழியின்றி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி வருகின்றனர். ஆனால் அதே நேரம் மாணவர்கள் மீது எந்தவித வன்முறையும் இன்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது போராட்டக்களத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் வெளியேறிவிட்ட நிலையில் ஒருசில மாணவர்கள் மட்டும் கடல் அருகில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply