மெரீனாவில் மாணவர்கள் போராட்டமா? பாதுகாப்பு குவிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை அடுத்து மெரீனாவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை அருகே உள்ள மாநிலக்கல்லூரியில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மாணவர்கள் திடீரென கோஷம் போட்டதை அடுத்து எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா நினைவிடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *