நிஜ வாழ்விலும் காதலில் சொதப்பிய பிரபல இயக்குனர்
balajimohan
‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் ஒரு காதலன் தனது காதலை காதலியிடம் சொல்ல முடியாமல் சொதப்புவது குறித்த திரைப்படத்தை சுவாரசியமாக இயக்கியவர் பாலாஜி மோகன். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ‘வாயை மூடி பேசவும், மற்றும் தனுஷ் நடித்த ‘மாரி’ ஆகிய படங்களையும் இயக்கினார்.

இந்நிலையில் சிறு வயது முதல் பழகி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் காதலித்து அதன் பின்னர் திருமணம் செய்து கொண்ட மனைவி அருணாவை பாலாஜிமோகன் தற்போது விவாகரத்து செய்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தாலும் திருமணத்திற்கு பின்னர் ஒருசில மாதங்களே ஒற்றுமையுடன் வாழ்ந்த இந்த தம்பதிகள் பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பாலாஜிமோகன் – அருணா தம்பதிக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. இந்த தகவலை பாலாஜிமோகன் தனது ஃபேஸ்புக் தளத்தில் உறுதி செய்துள்ளார். அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:

balaji mohan

Chennai Today News: Mari director divorce his wife

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *