shadow

மேடையிலேயே சரிந்து விழுந்து மரணம் அடைந்த பிரபல நடிகை

ashwini-ekbote759பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக் கலைஞருமான அஸ்வினி ஏக்போத் சமீபத்தில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44. மேடையிலேயே கீழே விழுந்து அஸ்வினி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புனே நகரில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வினி தன்னை மறந்து நடனம் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மேடையில் சரிந்து விழுந்தார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் மரணம் அடைந்துவிடதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பரத நாட்டியத்திலேயே கழித்துவிட்ட அஸ்வினி, அந்நிகழ்ச்சியின்போதே உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply