shadow

images (2)

என்னென்ன தேவை?

இறால் – 1/4 கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5 (அரைத்தது)
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
தக்காளி சாறு – 2 தேக்கரண்டி
புளிச்சாறு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

எப்படி செய்வது?

இறாலைக் கொண்டு பல வகை உணவுகளை சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மராட்டிய ஸ்டைல் இறால் குழம்பை சுவைத்துண்டா? இந்த குழம்பு மிகவும் காரமாக இல்லாமல் சற்று புளிப்பாக இருந்தாலும் வித்தியாசமான சுவையில் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்ந்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நிறம் மாறும் வரை கிளறி விடவும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இறாலின் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, அதில் தக்காளி சாறு சேர்த்து மீண்டும் குறைவான தீயில் சிறிது நேரம் வேக வைத்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் புளிச்சாறு சேர்த்து 5-6 நிமிடம் கொதிக்க விடவேண்டும். இறுதியில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, அதில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் மராட்டிய இறால் குழம்பு ரெடி !!

Leave a Reply