shadow

54 வயது கால்பந்து வீரர் மரடோனாவை மணக்கும் 25 வயது இளம்பெண்
maradona
அர்ஜென்டினா நாட்டு கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா தனது நீண்ட நாள் காதலி ரோசியா ஒலிவாவை திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது துபாய் நாட்டில் மரடோனாவும், ரோசியாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் துபாய் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரடோனாவின் காதலி ரோசியா ஓலிவா, இந்த ஆண்டு இறுதியில் தானும் மரடோனாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மரடோனா தன்னுடைய முதல் மனைவி கிளாடியா ஃபில்பானாவை கடந்த 2003ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் மூன்று பெண்களுடன் வாழ்ந்து வந்த அவர் தற்போது ரோசியாவை காதலித்து வருகிறார். முதலில் இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக கூறினாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவி போல வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

மரடோனாவின் முதல் மனைவி அவர் மீது பதிவு செய்த மோசடி வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்த வழக்கு முடிவுக்கு வந்த பின்னர் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிரது. 54 வயதான மரடோனா தன்னைவிட பாதி வயதிற்கு குறைவான அதாவது 25 வயதே ஆன ரோசியாவை வரும் டிசம்பர் 13ஆம் தேதி போப் ஆண்டவர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply