பிரதமர் மோடியை கொல்ல சதியா? மாவோயிஸ்ட் கடிதம் சிக்கியது

பிரதமர் மோடியை கொலை செய்ய நக்சலைட்டுகள் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கடிதம் ஒன்றில் சிக்கியதில் இருந்து தெரிய வந்துள்ளதாக மகாராஷ்டிர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் போலீசார் நக்சலைட் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பாரத பிரதமர் மோடியை கொல்ல நக்சலைட்டுகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் இந்த படுகொலையை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை போல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் மத்திய உளவுத்துறைக்கு,மகாராஷ்டிர போலீஸ் தகவல் அளித்துள்ளது.

மகாராஷ்டிர போலீசாரின் இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *