shadow

ஸ்னாப் சேட் நிறுவனத்தின் கொழுப்பு பேச்சால் பாதிப்புக்குள்ளான ஸ்னாப் டீல் நிறுவனம்

சமூகவலைத்தள சேட் செயலியான ஸ்நாப் சாட் சி.இ.ஓ சமீபத்தில் ”இந்தியா ஒரு ஏழை நாடு. எனவே அந்த நாட்டில் எங்கள் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமில்லை.” என கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவருடைய கொழுப்புமிக்க பேச்சு காரணமாக ஒட்டுமொத்த இந்தியர்களும் திடீரென ஸ்னாப் சேட் செயலியை அன் இன்ஸ்டால் செய்தனர். அதுமட்டுமின்றி #UninstallSnapchat #boycottsnapchat என்ற ஹாஷ்டேக்கும் டிவிட்டரில் டிரண்டானது.

இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்த காரணத்தினால் பிளே ஸ்டோரில், அந்த ஆப்பிற்கான ரேட்டிங்கும் ஐந்திலிருந்து திடீரென ஒன்றாக குறைந்தது.

இந்த நிலையில் ஒருசில இந்தியர்கள் தவறுதலாக ஸ்நாப் சாட் ஆப்பிற்கு பதிலாக, இணையதள வர்த்தக நிறுவனமான ஸ்நாப் டீலின் ஆப்பை அன் இன்ஸ்டால் செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான ஸ்னாப்டீல் நிறுவனம், ”ஸ்நாப் சாட் வேறு, நாங்கள் வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” என கூறிவருகிறது. ஸ்னாப் சேட் சி.இ.ஓ கொழுப்பு பேச்சால் ஸ்னாப்டீலுக்கும் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply