shadow

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகிறார் மனோஜ் பிரபாகர்

manojஇந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்த பிரபல வீரர் மனோஜ் பிரபாகர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடியும் வரை மனோஜ் பிரபாகர் பயிற்சியாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மனோஜ் பிரபாகர் ஒப்பனிங் பேட்ஸ்மேனாகவும், ஓப்பனிங் பவுலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 96 விக்கெட்டுக்களையும், ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 1600 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1858ரன்களும் இவர் எடுத்துள்ளார்.

Leave a Reply