இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு இல்லை நவாஸ் ஷெரீப்பின் அச்சுறுத்தலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தக்க பதிலடி கொடுத்தார்.

நவாஸ் ஷெரீப் பேச்சு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:-
என் வாழ்நாளில், இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளாது என்று மத்திய அமைச்சரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா உறுதிபட தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் கருத்து பற்றி நிருபர்கள் கேட்டதற்கு பரூக் அப்துல்லா கூறியதாவது:-
பொதுமக்களை கவர்வதற்காக இதுபோன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. நவாஸ் ஷெரீப், அரசாங்கத்தை நடத்துகிறார். மக்களை தன்னுடன் வைத்துக்கொள்வதற்காக, அவர் எதையாவது சொல்ல வேண்டி இருக்கிறது. அதை பார்த்து யாரும் பயப்படக்கூடாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக நான் கருதவில்லை.

அதே சமயத்தில், காஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். பிரச்சனை தீரும்வகையில், நாம் வேகமாக செயல்பட வேண்டும். அதன்மூலம், இரு நாடுகளிடையிலான நட்புறவு வலுப்படும் என்றார் மன்மோகன்.

Leave a Reply