shadow

சிறப்பான நிதியமைச்சராக இருந்த மன்மோகன், சிறப்பான பிரதமராக இல்லை. அருண்ஜெட்லி

manmohan singhமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வரும் 29ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில்  சிஎன்என் ஆசியா பிஸ்னஸ் அமைப்பின் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில்  அருண் ஜேட்லி பேசியதாவது:

மன்மோகன் சிங் நிதியமைச்சராக பதவி வகித்தபோது, எந்த நிதியமைச்சரும் செயல்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டு, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்றார். ஆனால் அவர் பிரதமரான பிறகு அந்த நடவடிக்கைகள் முடங்கிவிட்டன. அதன் விளைவே, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார மாற்றம் என்று ஜேட்லி கூறினார்.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் தலைமைதான் முக்கிய கொள்கை முடிவுகள் எடுத்தது. ஆனால் இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரதமர்தான் இறுதி முடிவு எடுக்கிறார்’ என்று கூறினார்.

arun jaitleyபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. எனவே, ஒவ்வொரு இந்தியரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அருண் ஜேட்லி, மன்மோகன் சிங்கின் நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பொறுப்பு குறித்து இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply