shadow

manjappaiவிமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான ‘மஞ்சப்பை’ என்னும் படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படம் தாசரி நராயணராவ் இயக்கத்தில் தெலுங்கு மொழியில் ரீமேக் ஆகவுள்ளது என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தாத்தா பேரனாக ராஜ்கிரண் மற்றும் விமல் நடித்திருந்த கேரக்டர்களில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கில் ராஜ்கிரண் நடித்த தாத்தா வேடத்தில் இயக்குனர் தாசரி நாராயணராவ் நடிக்கவுள்ளார்.

Leave a Reply