shadow

மணிப்பூர்: 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளா தோல்வி

மணிப்பூர் மாநிலத்தின் இரோம் ஷர்மிளா அம்மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதங்கள் சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் தொடர்ந்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்நிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டு சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

இவர் ஆரம்பித்த மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி கட்சி மாநிலம் முழுவதிலும் போட்டியிட்டது. இரோம் ஷர்மிளா மணிப்பூர் மாநில முதல்வர் ஓக்ராம் இபோமி சிங்கை நேருக்கு நேர் களத்தில் நின்றார். ஆனால் ஷர்மிளா தற்போது தோல்வி அடைந்துவிட்டதாகவும், முதல்வர் ஓக்ராம் அபார வெற்றி பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 5 இடங்களில் முன்னணியில் உள்ளது.

Leave a Reply